ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள்ளது.

Update: 2020-07-15 08:44 GMT
சென்னை,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் அண்மையில் வெளியானது.

இதற்கிடையே, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கூடாது என்று போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க தடையில்லை. நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. அரசின் உத்தரவில் தலையிட முடியாது  எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்