மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2020-07-19 10:32 IST
மதுரை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. மாவட்டத்தில் நேற்று  வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,044 ஆக இருந்தது. 

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,236 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மாவட்டத்தில் 4,758  பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,139 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்