நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மேலும் 36 நீதிபதிகள் ஆதரவு

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 36 பேர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.;

Update:2025-12-20 21:18 IST

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சிவஞானம் உள்பட 56 பேர் கூட்டாக கையெழுத்திட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை வெளியிட்டனர். அந்த கடிதத்தில், 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களின் செயல் நீதிபதிகளை மிரட்டும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மேலும் 36 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பார்த்திபன் உள்ளிட்ட 36 நீதிபதிகள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்