தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி; முதல் அமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி பற்றி முதல் அமைச்சர் பழனிசாமியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Update: 2020-07-19 08:00 GMT
சென்னை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.  இதனை தொடர்ந்து தமிழகத்தில் அதிக பாதிப்புகள் உள்ளன.  தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில தினங்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதன்படி இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 88 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரையில் 2,403 பேர் பலியாகி உள்ளனர்.  அதே போன்று தொற்று பாதிப்பும் 4 ஆயிரத்து 807 என்று புதிய உச்சம் தொட்டது.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  இதில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

இதற்கு முதல் அமைச்சர் பழனிசாமி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகின்றன.  நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்