கறுப்பர் கூட்டம் யூ டியூப் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்-எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில் செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார் .

Update: 2020-07-24 08:56 GMT

சென்னை,

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன்  என்பவர் ஜுலை 15 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.   இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 4-பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகாரில் கைதான செந்தில் வாசனுக்கு  4 நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்