புதிய கல்வி கொள்கையில் நாட்டின் ஜி.டி.பி.யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது - கமல்ஹாசன் கருத்து

புதிய கல்வி கொள்கையில் நாட்டின் மொத்த ஜி.டி.பி.யின் மதிப்பில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-30 10:59 GMT
சென்னை,

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை குறித்த விவரங்கள் நேற்று வெளியானது. இதற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த புதிய கல்விக் கொள்கையின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) மதிப்பில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜி.டி.பி.யில் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர் மருத்துவத்துறை வழக்கமான 1 சதவீதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்