தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள்: செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுக்கு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-07 18:47 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்கு தொண்டாற்றுகின்றவர்களையும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு வரலாற்றில் எக்காலத்திலும் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு எண்ணற்ற விருதுகளை தோற்றுவித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் தை மாதம் திருவள்ளுவர் தினத்தன்று கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

திருவள்ளுவர் விருது(2021), மகாகவி பாரதியார் விருது(2020), பாவேந்தர் பாரதிதாசன் விருது(2020), தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது(2020), கி.ஆ.பெ.விசுவநாதம் விருது(2020), பெருந்தலைவர் காமராஜர் விருது(2020), பேரறிஞர் அண்ணா விருது(2020).

இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tam-i-lv-a-l-a-r-c-h-it-hu-r-ai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரிக்கு வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்