விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு செயல்படும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு செயல்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-08-20 08:11 GMT
வேலூர்,

வேலூரில் 3 மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பழனிசாமி

செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,500 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை செய்யப்படும்.

கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும்.  திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை வேலூர் - 3,882 ராணிப்பேட்டை 3,878 திருப்பத்தூர் 3,540 மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் - மானியத் தொகை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.  காவேரிப் பாக்கம் ஏரி ரூ 40 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.  வேலூரில்

பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி டிசம்பரில் முடியும். நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேண்டுகோள் ஏற்பு, புதிய மார்க்கெட் கட்டித் தரப்படும். தென் பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் ரூ 648 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.  ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.   மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி
கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களுக்கு மத்திய அரசு அனுமதி  அளிக்கவில்லை. அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு செயல்படும். மத்திய பாஜக அரசின் வழிமுறைகளைதான் தமிழக அரசு செயல்படுத்துகிறது. கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும்
மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்