தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று -சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மேலும் 5,980- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2020-08-22 19:07 IST
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை. 

இந்த நிலையில்,  தமிழகத்தில் இன்று மேலும்  5,980 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,73,410-  ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 80   பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை   6,420-  ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து  5,603  - டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். . சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும்  1,294  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  

மேலும் செய்திகள்