தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-25 09:51 GMT
சென்னை,

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில் களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு உள்ளது.  ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது.  திரைத்துறையினர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்