மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2020-08-30 01:42 GMT
சென்னை, 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 தினங்களுக்கு மேலாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. 

அந்த வகையில் தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

மேலும் செய்திகள்