துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-03 15:22 GMT
சென்னை,

திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது  டுவிட்டரில்  நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:- "தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்