முகூர்த்தம், வாரஇறுதி நாள்: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

முகூர்த்தம், வாரஇறுதி நாளையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-05-02 03:00 GMT

சென்னை,

அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகிற 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் 3-ம் தேதி (நாளை) 290 பஸ்களும், 4-ம் தேதி (நாளை மறுநாள்) 365 பஸ்களும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3 மற்றும் 4-ம் தேதி 55 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும் சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,522 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்