பவானிசாகர் அணைக்கு சீரான நீர்வரத்து; நீர்மட்டம் 99 அடியாக நீடிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த 10 நாட்களாக அணை நீர்மட்டம் 99 அடியாக நீடிக்கிறது.

Update: 2020-09-11 03:01 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி 102 அடியை தொட்டது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணைக்கு நீர்வரத்து ஓரளவு சீராக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக நீடிக்கிறது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.16 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து ஒரு வினாடிக்கு 4,922 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணையில் தற்போது 28 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்