மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,575 கனஅடியாக குறைந்த‌து

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 8,575 கனஅடியாக குறைந்துள்ளது.

Update: 2020-09-13 03:55 GMT
சேலம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையி இன்று அணைக்கு வருய்ம் நீர்வரத்தின் அளவு சர்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,575 கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரி பாசனத்திற்காகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாகவும் அணையில் இருந்து விநாடிக்கு 6,700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 92.2 அடியாக உள்ள நிலையில் அணையின் நீர் இருப்பு 55.2 டி.எம்.சி.யாக உள்ளது.

மேலும் செய்திகள்