மகாளய அமாவாசை: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை கரையில் தர்ப்பணம் செய்ய தடை - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மகாளய அமாவாசையொட்டி திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை கரையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2020-09-15 06:48 GMT
திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையின் கரையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. வருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை வருகிறது. 

இந்த நாளில் வழக்கம்போல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சரவணப் பொய்கையின் கரையில் தர்ப்பணம் செய்ய கூட கூடும். ஆனால் அன்று அரசு வழிகாட்டு நெறிமுறையின்படி பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சரவண பொய்கையின் கரையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே அன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்