கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-09-23 14:40 GMT
சென்னை,

கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள  மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,  உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினார்.  முதல் அமைச்சர் பழனிசாமி மேலும் கூறுகையில்,

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு ஆகும். தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவைப்படுகிறது.  தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது” என்றார்.

மேலும் செய்திகள்