தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் 5,692 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-24 13:40 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 66 உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக அதிகரித்துள்ளது.  

இன்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,08,210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46 ஆயிரத்து 405 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 112 என, 178 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னையில் அதிகபட்சமாக 1,089 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட இன்றைய மாதிரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 607. இதுவரை 68,15,644 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் இன்றைய எண்ணிக்கை 88 ஆயிரத்து 784. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 66,08,675.

இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்