மேட்டூர் அணையின் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

Update: 2020-09-25 03:26 GMT
மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியது. இதன் காரணமாக நேற்று வரை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.6 அடியாக உள்ளது. தற்போது அணையில் 64.3 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 850 கனஅடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்