என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி - ரஜினிகாந்த் இரங்கல்

நூறாண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2020-09-25 10:14 GMT
சென்னை,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த  எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:  “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்