செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா? - சு.வெங்கடேசன் கண்டனம்

செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா? என்று மத்திய அரசுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-06 11:29 GMT
சென்னை, 

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டிருந்தது, கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா? என்று மத்திய அரசுக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் “தமிழ்” இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்