ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் - அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

உச்சநீதிமன்றத்தில் அப்போலோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதமாவதை அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-18 06:35 GMT
சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக தரப்பட்ட அவகாசம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதம் நீட்டிக்க ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்கக்கோரும் மனு உள்ளிட்ட மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்று ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. மேலும் அப்போலோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக் கோரும் போது, வழக்கு விசாரணை தாமதமாவதை குறைந்தபட்ச ஆட்சேபனை கூட தெரிவிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே வரும் 24 தேதியுடன் முடிய உள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஆறுமகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்