தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-18 07:54 GMT
சென்னை,

இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பின்னர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். மேலும் முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று அவர் கூறினார்.

நீட் தேர்வுக்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்