7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் - எல்.முருகன் கோரிக்கை

7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-10-25 11:27 GMT
சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-

நவ.,6 முதல் டிச.,6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும்.  தாமதமானாலும், மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.

திருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும்  27-ம் தேதி  பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும். மனுதர்மம் எங்கு உள்ளது. அது நடைமுறையில் உள்ளதா. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்