திருக்குவளையில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை

திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கியதால் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2020-11-20 13:49 GMT
சென்னை,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை திருச்சியில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், பின்னர் திருக்குவளை நோக்கி சென்றார். அங்கு பிரச்சாரத்தின் போது கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்த தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை உதயநிதி ஸ்டாலின், அவருடன் கைதான திமுக தொண்டர்கள் உள்பட அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக  திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். உதயநிதியின் பிரசார பயணம் நாளை திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்