கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை
தமிழகத்தில் 14-ஆவது நாளாக இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த் 24 மணி நேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,173 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 396 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 40-ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கொரோனாபாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,13,801 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 60,365 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று மேலும் 1,797 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,332 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த் 24 மணீ நேரத்தில் கொரோனா பாதிப்பில் 14 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,837 பேர் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
மாவட்டங்கள் | நவ. 26 | மொ.பாதிப்பு | குணமானவர்கள் | சிகிச்சையில் | இறப்பு |
அரியலூர் | 3 | 4,544 | 4,478 | 18 | 48 |
செங்கல்பட்டு | 48 | 47,231 | 45,763 | 757 | 711 |
சென்னை | 396 | 2,13,801 | 2,05,944 | 4,020 | 3,837 |
கோயம்புத்தூர் | 158 | 48,133 | 46,849 | 679 | 605 |
கடலூர் | 11 | 24,124 | 23,769 | 80 | 275 |
தருமபுரி | 12 | 6,018 | 5,831 | 137 | 50 |
திண்டுக்கல் | 42 | 10,201 | 9,918 | 90 | 193 |
ஈரோடு | 84 | 12,202 | 11,731 | 332 | 139 |
கள்ளக்குறிச்சி | 8 | 10,632 | 10,460 | 66 | 106 |
காஞ்சிபுரம் | 43 | 27,462 | 26,757 | 282 | 423 |
கன்னியாகுமரி | 19 | 15,612 | 15,248 | 113 | 251 |
கரூர் | 12 | 4,760 | 4,516 | 197 | 47 |
கிருஷ்ணகிரி | 22 | 7,332 | 7,020 | 200 | 112 |
மதுரை | 33 | 19,615 | 18,957 | 220 | 438 |
நாகப்பட்டினம் | 3 | 7,537 | 7,151 | 262 | 124 |
நாமக்கல் | 33 | 10,283 | 9,963 | 218 | 102 |
நீலகிரி | 34 | 7,339 | 7,139 | 159 | 41 |
பெரம்பலூர் | 1 | 2,235 | 2,212 | 2 | 21 |
புதுக்கோட்டை | 12 | 11,078 | 10,818 | 106 | 154 |
ராமநாதபுரம் | 1 | 6,188 | 6,014 | 43 | 131 |
ராணிப்பேட்டை | 18 | 15,556 | 15,302 | 75 | 179 |
சேலம் | 93 | 29,572 | 28,558 | 578 | 436 |
சிவகங்கை | 11 | 6,268 | 6,058 | 84 | 126 |
தென்காசி | 10 | 8,033 | 7,796 | 82 | 155 |
தஞ்சாவூர் | 22 | 16,295 | 15,929 | 138 | 228 |
தேனி | 13 | 16,557 | 16,330 | 31 | 196 |
திருப்பத்தூர் | 8 | 7,188 | 7,064 | 1 | 123 |
திருவள்ளூர் | 67 | 40,668 | 39,477 | 541 | 650 |
திருவண்ணாமலை | 43 | 18,559 | 18,151 | 134 | 274 |
திருவாரூர் | 7 | 10,387 | 10,121 | 163 | 103 |
தூத்துக்குடி | 18 | 15,622 | 15,369 | 118 | 135 |
திருநெல்வேலி | 15 | 14,765 | 14,429 | 127 | 209 |
திருப்பூர் | 71 | 15,115 | 14,293 | 615 | 207 |
திருச்சி | 27 | 13,324 | 13,016 | 136 | 172 |
வேலூர் | 32 | 19,201 | 18,709 | 162 | 330 |
விழுப்புரம் | 11 | 14,543 | 14,311 | 122 | 110 |
விருதுநகர் | 22 | 15,841 | 15,549 | 66 | 226 |
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 0 | 926 | 922 | 3 | 1 |
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) | 1 | 999 | 982 | 16 | 1 |
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் | 0 | 428 | 428 | 0 | 0 |
மொத்தம் | 1,464 | 7,76,174 | 7,53,332 | 11,173 | 11,669 |