வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.

Update: 2020-12-01 04:48 GMT

புதுடெல்லி,

 நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.   

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்