சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-08 10:42 GMT
ஐதராபாத்,

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலை சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராதிகா சரத் குமார் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ” ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது. 

அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்து. சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்