வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-01-01 09:26 GMT
சென்னை,

இது தொடர்பாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தோளோடு தோள் நின்று துணை புரிய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்,. 

பஞ்சாப் மற்றும் கேரள மாநிலத்தை போல வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையிலேயே தங்கி போராடி வரும் விவசாயிகளுக்காக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து விவசாயிகள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற  வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.

மேலும் செய்திகள்