தமிழுக்கு பெருமைசேர்த்த பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றி - ஒ.பன்னீர் செல்வம்

தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றி என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-14 14:16 GMT
சென்னை,

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு சுமார் ரூ.8000 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழில் ஔவையார், மற்றும் பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டி பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்நிலையில் தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றி என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழகம் வளம்பெற உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை மக்களுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, தனது உரையில் ஔவையார்,பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.




தனது உரையில் ஔவையார்,பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமைசேர்த்த மாண்புமிகு பிரதமர் @PMOIndia அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

— O Panneerselvam (@OfficeOfOPS) February 14, 2021

மேலும் செய்திகள்