"எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது; நானே மெட்ரோ ரெயிலில் ஏர்போர்ட் செல்லலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்

எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது, நானே மெட்ரோ ரெயிலில் ஏர்போர்ட் செல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2021-02-14 16:07 GMT
சென்னை,

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே இன்று புதிதாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரெயில் நிலையத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தவை. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வந்ததால் முதல்-அமைச்சர் பிரதமரை தனியாக சந்தித்த போது மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது. கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச வில்லை. 

எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது, நானே மெட்ரோ ரெயிலில் ஏர்போர்ட் செல்லலாம். வட சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கியதால் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். வரும் 2025-ம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றி அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்.  அதிமுகவினரை எதிரியாக நினைக்கும் அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்