தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,468-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-02-16 06:20 GMT
சென்னை,

கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.35,744-க்கு விற்பனையாகிறது. அதே நேரம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,468-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்