அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு

அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.

Update: 2021-02-17 04:34 GMT

சென்னை,

அ.ம.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணியளவில் சென்னை, தாம்பரம், சண்முகம் சாலையில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு, தென்சென்னை கிழக்கு ஆகிய மாவட்டங்களின் சார்பில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டங்களையும், ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் அ.ம.மு.க. தொண்டர்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

மேலும் செய்திகள்