தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-02 10:16 GMT
சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. வாக்குப் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “ தமிழகத்தில் 6,26,74,446 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,253 வாக்காளர்களும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்