3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார் கவர்னர் வரவேற்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 3 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்து இறங்கினார்.

Update: 2021-03-09 23:23 GMT
ஆலந்தூர், 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 3 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்து இறங்கினார். அப்போது அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட கலெல்டர் ஜான் லூயிஸ், ராணுவ தளபதி ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்தநிலையில், இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கவா்னா் மாளிகையில் இருந்து காரில் சென்னை பழைய விமான நிலையம் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு புறப்பட்டு செல்கிறாா். வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர், வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். மாலை 6 மணிக்கு வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், சென்னை கவா்னா் மாளிகையில் இரவு தங்குகிறார்.

அதைத்தொடர்ந்து, நாளை(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். விழா நிறைவடைந்ததும், பகல் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறாா். ஜனாதிபதி வருகையை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்