தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் ரஜினிகாந்துக்கு, கவர்னர் வாழ்த்து

சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-04-01 20:33 GMT
சென்னை,

சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்த விருதை பெறுவதன் மூலம், இந்திய சினிமாத்துறையில் உங்களது (ரஜினிகாந்த்) பங்களிப்பு தனி முத்திரையை பதித்துள்ளது.

சினிமாவுக்கு மட்டும் தங்களை பயன்படுத்தி கொள்ளாமல் சமூக-கலாசார மற்றும் அரசியல் நலன் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களுக்கும் எப்போதும் குரல் கொடுத்து வருகிறீர்கள். சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தூதர் என்ற தனித்துவம் காரணமாக மொழி மற்றும் மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகளின் சுவர்களை உங்களது புகைப்படம் அலங்கரித்து வருகின்றன.

எதிர்காலத்தில் உங்களது அனைத்து நல்ல பணிகளும் தொடர உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்