கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழை

கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2021-04-05 12:17 GMT
சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தொடக்கமே கொடூரமாகி உள்ளது. சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பம் சலனகாரணமாக கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

நாமக்கல், பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கோவை, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கூடலூர் மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்