கொரோனா 2-வது அலை - உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை மூடல்

கொரோனா பரவல் காரணமாக புராதன சின்னங்களான வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

Update: 2021-04-16 05:46 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்கள் சுற்றுலா தளங்கள் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகப் புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளிநாட்டினர் உட்பட, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை, மே 15ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்து, மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், பெரிய கோயில் நுழைவு வாயிலில் அறிவிப்பு விளம்பரம் வைக்கப்பட்டு, கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

அதேநேரம், கோவில் ஆகமவிதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் அறிவித்தனர். இதேபோல், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐராவதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.

மேலும் செய்திகள்