கொரோனாவை விரட்டுவதற்கு ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-04-18 16:12 GMT

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாளை முதல் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இரவு நேர ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ஊரடங்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா தடுப்புக்கான பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக பின்பற்றாதது தான் நோய்ப்பரவலுக்கு முக்கிய காரணமாகும். ஊரடங்கு விதிகளை மட்டுமின்றி, முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம். பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று பிளஸ்-2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு வெளியில் சுற்றாமல் வீடுகளில் தங்கி நன்றாக படித்து, அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி வாய்ப்புகளை பிரகாசமாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்