தமிழக அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்: கசப்பு மருந்தாக கருதி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

தமிழக அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்: கசப்பு மருந்தாக கருதி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

Update: 2021-04-25 01:20 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும்கூட, இவற்றை கசப்பு மருந்தாகக் கருதி ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.

கொரோனா விஷயத்தில் வடஇந்திய மாநிலங்களில் உள்ளது போன்ற ஒரு மோசமான நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், அரசு இப்போது அறிவித்துள்ளது போன்ற சற்றே எளிதான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. அதேவேளை நம்மைக் காக்க நமக்கு நாமே சாத்தியமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமது உயிரைக் காக்கும்.

நோய்த் தடுப்புக்காக டாஸ்மாக் கடைகளை மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ள தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும். அதுதான் பெருமளவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும். சலூன் கடைகளை மூடுவது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் வாழ்வாதாரங்களை இழக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்