மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் விவரம்

கொரோனா பரவல் காரணமாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

Update: 2021-05-07 03:31 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழாவில்  கலந்து கொள்ள அரசியல் தலைவர்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் எளிய முறையில் விழா நடைபெறுகிறது. முதல்வர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.  காங்கிரஸ் சார்பில் தினேஷ் குண்டுராவ், கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்புடன் வந்த மு.க ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மேலும் செய்திகள்