கொரோனா பரவல் தடுப்பு விவகாரம்: புதுச்சேரி அரசு தரும் தகவல் சரியானதாக இல்லை ஐகோர்ட்டு கருத்து

கொரோனா பரவல் தடுப்பு விவகாரம்: புதுச்சேரி அரசு தரும் தகவல் சரியானதாக இல்லை ஐகோர்ட்டு கருத்து.

Update: 2021-05-12 23:14 GMT
சென்னை, 

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வக்கீல் ஞானசேகரன் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி, பத்திரிகைகளில் வரும் செய்திகள் புதுச்சேரி அரசு தரும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. அரசு தரும் தகவல்களும், மாநிலத்தில் உண்மை நிலையும் வெவ்வேறாக உள்ளன என்றார்.

அதைக்கேட்ட நீதிபதிகள் புதுச்சேரி அரசு வக்கீலிடம், நீங்கள் தாக்கல் செய்த அறிக்கை சரியான தகவல்களுடன் இல்லை என்றனர். அப்போது வக்கீல் ஒருவர் ஆஜராகி, கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிப்பு அதிகரிக்கப்படவில்லை. ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன என்றார்.

அதையடுத்து, புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்