கொரோனா பாதித்தவர்களுடன் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கக்கூடாது - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவமனைகளில் தற்காலிக படுக்கைகளாக, ஸ்ட்ரெச்சர் படுக்கைகளை பயன்படுத்தலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-13 11:23 GMT
சென்னை, 

கொரோனா பாதித்தவர்களுடன் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் மருத்துவமனைகளில் தற்காலிக படுக்கைகளாக, ஸ்ட்ரெச்சர்களை படுக்கைகளாக பயன்படுத்தலாம் என்றும், மூடப்பட்ட, செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை தற்காலிகமாக சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்றும், தமிழக அரசின் தற்போதைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. 

இதனிடையே ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கவுன்ட்டர்களுடன் நேரு ஸ்டேடியத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக ஐகோட்டில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்