கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் உத்தரவு

கடலூரில் அமோனியா பாய்லர் வெடித்து 4 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Update: 2021-05-13 23:58 GMT
சென்னை, 

கடலூர் மாவட்டத்தில், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கிரிம்சன் நிறுவனத்தில் நேற்று அமோனியா பாய்லர் வெடித்ததில் அமோனியா வாயு வெளிவந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம் பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி, காரைக்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சவிதா, புவனகிரி பகுதியைச் சேர்ந்த விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்து, கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்