தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு, முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.

Update: 2021-05-14 09:26 GMT
சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, இதுவரை 27-ம் கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்தகட்ட விசாரணை (மே) 17-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். விரைவாக விசாரித்து விசாரணை அறிக்கையை அரசிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம் என்று ஒரு நபர் ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினிடம், துப்பாக்கிச்சூடு சம்பவம் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி  அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உடனிருந்தார்.

மேலும் செய்திகள்