மே மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

கொரோனா முடக்கம் காரணமாக மே மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-30 22:14 GMT
கோப்புப்படம்
சென்னை, 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன்களை வாங்கி மாதத் தவணைகளை கட்டி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சீராகும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாத தவணைகள் வசூலிப்பதை நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி மூலம் அறிவிப்பு வெளியிட தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். 

ஊரடங்கு காரணமாக அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு உயர்ந்து உள்ளது. இதனால் வழக்கதை விட மின்சார பயன்பாடு அதிகரித்து மின்சார கட்டணமும் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வேலை ஏதும் இல்லாமல் வருமான இழப்பை சந்தித்துள்ள பொதுமக்களுக்கு அதிகப்படியான மின்சார கட்டணமும் கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தமிழக அரசு மே மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 50 சதவீதம் மின்சார பயன்பாட்டு சலுகையுடன், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்