தமிழகத்தில் வலுவான கல்வி கட்டமைப்பு உள்ளதால் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் வைகோ கோரிக்கை

தமிழகத்தில் வலுவான கல்வி கட்டமைப்பு உள்ளதால் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டும் வைகோ கோரிக்கை.

Update: 2021-06-02 20:56 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. ஆகியவற்றில் மேல்நிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கிறார், ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழக கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும். தமிழகத்தில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேல்நிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்