புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரி கட்டண வீதங்களை திருத்தி அமைக்க வேண்டும்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரி கட்டண வீதங்களை திருத்தி அமைக்க வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை.

Update: 2021-06-02 21:00 GMT
சென்னை,

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.மோகன், தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவும் வகையில், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஏதுவாக ஆஸ்பத்திரி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை கட்டணத் தொகைகளை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட அதே வீதத்தில் அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.

தற்போது முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட கட்டண வீதங்கள் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதே கட்டண வீதத்தை, ஓய்வூதியர்களும் பலன் பெறும் வகையில் புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரி கட்டண வீதங்களை திருத்தி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்