தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

Update: 2021-06-04 08:25 GMT
சென்னை,

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே  10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே  24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்