சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-06-04 08:36 GMT
சென்னை, 

சென்னையில் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முன்னாள் முதல்வரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக

*கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள்

*கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

*கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்

*கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக் கூடாது; முடிவை உடனே தெரிவித்தால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்

*சசிகலா அதிமுகவில் இல்லை; அமமுகவினருடன் தான் அவர் பேசி வருகிறார்.

*அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார், அது நடக்காது

*சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக்கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. 

*ஓ பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

மேலும் செய்திகள்